தகவல் களம்
என்னிடம்
ஒரு தகவலைத் தருகிறாய்.
அதைப் பிறரிடம்
கொண்டு சேர்க்கலாமா
வேண்டாமா? எனும்
குழப்பத்தில் இருக்கும் போதே;
அடுத்தொரு
தகவலைத் தருகிறாய்.
அது அனைவரிடமும் சொல்லி
மகிழக்கூடிய
நல்ல தகவலாக இருக்கிறது.
மீண்டும்
அடுத்தொரு தகவலைத் தருகிறாய்.
நல்ல தகவல் என்பதால்
அதை அனைவரிடமும் சொல்லி
மகிழ்கிறேன்.
அதற்கடுத்து உன்னிடமிருந்து
வந்த தகவல் பிறரிடம்
சொல்லக் கூடியதாய் இல்லை.
அதற்கடுத்தடுத்து
உன்னிடமிருந்து பெற்ற
தகவலோ முதல்
தகவலைப் போலவே
பிறரிடம் சொல்லலாமா
வேண்டாமா? எனும்
குழப்பத்திலும்
இழுபறியிலும் இருக்கிறது.
போதும் போதும்
உன் தகவல் பரிமாற்றத்தை
இத்துடன் நிறுத்திக் கொள்.
தகவல் யுத்தக்களத்தில்
என்னால்
இனி தனித்துப் போராட முடியாது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.