மயானத்தில்...
மெளனமாய் இதயம்...
சலனமில்லாமல் !
ஏதேதோ கவனத்தில்!
நெருங்கிய யாருடைய மரணத்தையோப்
பக்கத்திலிருந்து ஆராய்கிறது...
மயானத்தில்!
நொருங்கவும் செய்கிறது!
யார் யாரெல்லாமோ...
செய்தது
செய்யாதது
செய்யத் தவறியது
தவறிச் செய்தது... என...
அத்தனையும் ஆளாளுக்கு...
கேட்டோக் கேட்காமலோ
புலம்புகிறார்கள்!
இல்லை... புகழ்கிறார்கள்...
அந்த ஆளைப்பற்றி...
ஆனாலும்
அத்தனையும் பாடமாய்...
மெளனங்கள் மனதுக்குள்
புதைக்கின்றன...
புகைக்கின்றன...
இனி குடியை நிறுத்த வேண்டும்...
இனி பெருந்தீனியை நிறுத்த வேண்டும்...
கொழுப்பை உண்பதிலும்
உதறிப்பே சுவதிலும் குறைக்க வேண்டும்...
இனி உடலைப் பார்க்கவும்
இனி உறவைப் பார்க்கவும்
வெறுப்பைச் சம்பாதிக்காமல்
பொறுப்பாய் சம்பாதிக்கனும்...
அத்தனைத் தீர்மானங்களையும்...
எத்தனை மனங்கள்
அரங்கேற்றும் தெரியுமா...?
அந்த மயானத்தில்...
அத்தனையும் மாயமாகும்
தொடரும் கறிவிருந்தில் இயல்பாகவே....!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.