புரியாத புதிர்கள்
புயலும் பெருமழையும்...
வெள்ளமும்...
தீர்க்க முடியா தீநுண்மி...
பூகம்பம் ஆழிப்பேரலையென...
இயற்கைப் பேரிடர்கள்
இயல்பாய் வந்து...
மனிதநேயத்தை உரசிப் பார்க்கிறதோ!
இல்லை!
நான்... நீ...யெனும்
ஆணவத்தை அழிக்க வந்ததோ!
இல்லை! ஊருக்கு வெளியே...
வைத்த சமத்துவபுரத்தை
ஊருக்குள் நிகழ்த்த வந்ததோ!
சமத்துவமாய் ... எதிர்நோக்க...
கைபார்க்க! கையேந்த...
இல்லை!
விஞ்ஞானத்தைக் கேலிசெய்து...
அஞ்ஞானத்தையும்
மெய்ஞானத்தையும்
ஆன்மிகத்தையும் போதிக்கிறதோ!
புரியாத புதிர்கள்...
இன்னும் உண்டென...
காலம்தான் உருள்கிறதோ!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.