பெருமழை
பெருமழையை என் கவிதைக்குள்
நிரப்பிக்கொண்டே வந்தேன்!
ஒரு நிலையில்
நினைப்பில் மன்னனாய்... நான்...
குளம் குட்டை கம்மா
ஊரணி ஏரி நிரம்பிக்கிடக்குமென...
பேராசை...!
விவசாயம் செழிக்குமென விரும்பி!
நாடு நகரம் வலம் வரும்
முனைப்பில்...
நான்...!
நினைப்பில் மன்னனாய்!
தன்னிலை இழந்து...
முன்னிலை குடியிருப்புகளாய் மாறிய
குளம் குட்டை கம்மா
ஊரணி ஏரி ...
நிரம்பியேக் கிடந்தது...
வெள்ள நிவராணம் கேட்டு மக்கள்!
நினைப்பைக் கலைத்து...
நிஜத்துக்கு வந்துவிட்டேன்!
இப்பவும் மழை நீர் நிரம்பியே
வலிக்கிறது என் கவிதைக்கு!
இறக்கி வைக்க இடம் ஏதென்று!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.