தற்கொலை
உயிரைத் தக்க வைக்க...
ஊர்ப்பட்ட போராட்டம்!
அனாதை விடுதியில்...
ஆதரவற்று தெருவில்...
ஆடம்பர பங்களாவில்...
மகத்துவமான மருத்துவமனையில்!
புயல் வெள்ளம்
பூகம்பம் வந்து போனாலும்...
பூமி தன்னையும் சுற்றி...
சூரியனையும் சுற்றத்
தவறியதேயில்லை!
விழுவதும் எழுவதும்
நிழலுக்கு மட்டுமல்ல...
சூரியனுக்கும்தான்!
இருந்தும் இங்கே தற்கொலை!
நிலையெதற்கு!
வாழ வழியில்லாதவனின்
கடைசி முடிவா...
இல்லை!
வாழ வலித்துப் போனவனின்
சபலம் தானே!
ஒருமுறை யோசித்திருந்தால்...
பிண அறையில் மேனியெல்லாம்
ஆராய்ந்து அறுத்து தைத்துப் போகும்...
செய்தியிலும் வந்து
மனதை தைத்தும்...
நாளடைவில் மறந்தும் போகுமென...
ஒருமுறை யோசித்திருந்தால்...!
தற்கொலையெல்லாம்
தற்கொலை செய்தே கொள்ளும்!
தற்கொலையை!
சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும்
வந்து போகும் நடிகை நடிகன்
சிலர் பலர்...
நோந்து போவதேன்...
முகநூலுக்குள் முகம்காட்டி
முனுமுனுத்தால் போதுமே...
அகம் மகிழ ஆயிரம் கை நீளும்!
ஒருமுறை யோசித்திருந்தால்...
தற்கொலையெல்லாம்
தற்கொலை செய்து கொள்ளும்!
தற்கொலையை!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.