நிம்மதி நாடிடு...
பொய்களில் புனைந்த
புலம்பலின் உருவம்
நிஜங்களின் தரிசனம்
நீண்டிட மிரளும்
அதிசய நாடகம்
அம்பலம் ஆகும்
அடியெடுத்த பாதை
அக்கினியாய் மாறும்
தனக்கென உள்ளதை
தெரிந்து கொள்ளாமல்
தரித்த வேடங்கள்
தாக்குப் பிடிக்காமல்
தலை தெறிக்க ஓடிடும்
தன் வழி தேடிடும்
உனக்கென உதித்தது
ஊர் தடுத்து நிற்காது
தனக்கென இல்லாதது
தலைகீழ் நின்றாலும்
தன்னிடம் சேராது
தங்கியும் நிற்காது...
நினைத்ததை எட்டிட
நில்லாமல் உழைத்திடு
நிதர்சனம் உணர்ந்து
நிம்மதி நாடிடு..!
- அன்புடன் ஆனந்தி, மிச்சிகன், வட அமெரிக்கா.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.