யாசிப்பது கூட...
அனாதை விடுதிகள்...
அனாதைகளையும்
முதியோர் இல்லங்கள்...
முதியோர்களையும்...
ஆதரவாய் ஆதரித்து
கையளவு மனசில் கர்ணனாய்
கைநீட்டி உதவும் உபயதாரர்கள்
உதவும் அரசுத் திட்டங்கள்...
காத்தபடி இருந்தும்
நாளெல்லாம் காத்திருந்து
கையேந்தும் நபர்களை
எங்கெங்கோ கண்கள்
கடத்திப்போகும் தருணமெல்லாம்
அனாதை விடுதிகள் காணாதோயென
யோசித்து எழுப்பிய வினாக்கள்
அர்த்தமற்றுப்போகிறது...
வரவு செலவு தப்பாது பார்த்து
மகனோ மகளோ
கல்நெஞ்சாய்
யாசிப்பது கூட சுய தொழிலென
விடை சொல்லிய பொழுதில்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.