நாயும் மனிதமும்...
நன்றியில் மனிதரை
விடவும் மேலானதென
வாலை ஆட்டியபடி
பரிவோடு குழையும்
நாயைப் பார்த்துச் சொல்கிறார்
ஒருவர்
குரைத்தபடி
பின்தொடரும் நாயைத்
தன் பாதுகாப்புக்கென
கல்லெடுத்து வீசி
பெருமூச்செடுக்கிறார்
ஒருவர்
வீட்டின்
பாதுகாப்பு நலன் கருதி
ஆளுயர நாயை
வாசலில் சங்கிலியால்
பிணைத்து வைத்து
பயமுறுத்துகிறார்
இன்னொருவர்
நாயை
தன் மடியிலமர்த்தி
கொஞ்சி விளையாடி
பாசத்தோடு முத்தமிட்டு
கனிவோடு ரொட்டியும்
பாலும் கொடுத்து
ஒரு குழந்தையாய்ப் பாவிக்கிறார்
இன்னொருவர்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.