நீர்க்கசிவு...?
கல் முளைத்து நிலமெல்லாம்...
விதைப்பிலும் விளைச்சலிலும்
விலகி நாளாயிற்று!
வீட்டு மனையாகி
விலை பேசப்
பதிந்த கால்கள்...
நிலத்தின் ஈரத்தைப் புரியவேயில்லை!
ஊருக்கும் உறவுக்கும்
உள்ள தூரத்தை அளந்தனர்!
விளைந்த பயிறு
அவை நிறைத்த வயிறு
விலக்கிய பசியை... நினைக்கவேயில்லை!
விளைய உதவிய ஈரம்...
விலை உயர உதவவேயில்லை!
ஈரத்தைப் பயன்படுத்திய
ஈரமில்லா மனம்...
விலை குறைத்தேக் கேட்கிறது!
விளைந்த நிலத்தை!
விளைச்சலைத் துறந்த நிலத்தை!
வீட்டு மனையாய்ப் பார்த்து!
நிலமகளின் விழிக் கசிவை...
நீர்க்கசிவென சொல்லியே!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.