கருணை முரண்கள்
வற்றிட்டமார்போடுவயிறுஒட்டி
வாட்டுகின்றபசியோடுகுழந்தைக்காகப்
பெற்றவளோபால்வாங்கக்கையைஏந்த
பெருங்குரலில்வசைபாடித்துரத்திவிட்டு
நற்தெய்வப்பக்தியெனும்பெயரைத்தாங்கி
நன்கொடையின்புத்தகங்கள்கையில்ஏந்தி
பொற்சிலைக்குப்பால்முழுக்குசெய்வதற்கே
பொருள்கேட்டுச்செல்கின்றார்நேயம்மிக்கோர் !
வேண்டாதக்குப்பையெனத்தெருவின்ஓரம்
வீசிவிட்டஅனாதைசிசுபிச்சைகேட்டே
நீண்டகையைவெறுத்தேசித்துரத்திவிட்டு
நிறம்பலவாய்நன்கொடையின்புத்தகத்தைக்
காண்பவரின்முன்நீட்டிஅனாதையர்க்கே
கட்டுகின்றோம்இல்லமெனக்கனிவாய்க்கூறி
மூண்டெழுந்தஇரக்கத்தின்பெயரைத்தாங்கி
முழுவேடம்போடுகின்றார்கருணைமிக்கோர் !
பட்டினியின்மயக்கமொடுபாதையோரம்
பரிதாபக்கோலமுடன்பிச்சைகேட்டே
வட்டிலேந்திஇருப்போரைக்கண்ணால்பார்த்தும்
வாய்க்குணவுஅளிக்காமல்வசைகள்பாடி
கொட்டுமழைபோல்இரக்கப்பெயரைத்தாங்கிக்
கொடுக்கின்றோம்அன்னதானம்என்றுசொல்லிக்
கட்டுகளாய்நன்கொடையின்புத்தகங்கள்
கரமேந்திச்செல்கின்றார்அன்புமிக்கோர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.