எண்ணி... எண்ணி...
எண்ணி எண்ணித்தான் வாங்குகிறோம்...
எண்ணியதை எண்ணும்படி
வாங்கும் போதும் எண்ணிக் கொடுக்கிறோம்!
எண்ணும் எண்ணிக்கை அதிகரிக்க
அவசியமாக வாங்க எண்ணியதை...
கைகள் எண்ணாததை
கணக்குகள் எண்ணிப் பார்த்து
வருமானக் கணக்கும்
வயதுக் கணக்கும் எண்ணிக் கொடுத்து...
வாங்கியே விடுகின்றன!
எண்ணி எண்ணி வாங்கிக் கொடுப்பதை விட...
எண்ணி எண்ணி
வாங்கியதற்குக் கொடுப்பதுக் கூடிப்போச்சு!
தங்கிப்போக ஆசைப்படும் பணத்திற்கு...
தவணைகள் தண்ணி காட்டுகின்றன!
மூச்சு முட்ட முடித்தாலும்
புதிது புதிதாய் ஒட்டவந்து...
உச்சுக் கொட்டவே வைக்கிறது!
எண்ணி முடியும் ஆசை...
எண்ணியபடியே எப்போதும்!
- க. மகேந்திரன், தூத்துக்குடி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.