இயற்கையின் நியதி
பூக்களைத் தேடி
வண்டுகள் வருவதும்
கனிகளைத் தேடி
பறவைகள் வருவதும்
இனிப்பைத் தேடி
எறும்புகள் வருவதும்
தாயைத் தேடி
பிள்ளைகள் வருவதும்
காதலியைத் தேடி
காதலன் வருவதும்
குருவைத் தேடி
சீடன் வருவதும்
மக்களைத் தேடி
தலைவன் வருவதும்
கடவுளைத் தேடி
பக்தர்கள் வருவதும்
கரையைத் தேடி
அலைகள் வருவதும்
பூமியைத் தேடி
மழை வருவதும்
பள்ளம் தேடி
வெள்ளம் வருவதும்
உழைப்பைத் தேடி
செல்வம் வருவதும்
ஒன்றைத் தேடி
ஒன்று வருவதெல்லாம்
இயற்கையின் நியதி.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.