மகளிர் நாள்
கண்களெனப்பேசுகின்றபெண்கள்தம்மைக்
கண்ணாகப்பேணுதற்கேமகளிர்நாளாம்
பெண்களினைமதிப்புடனேபோற்றிநல்ல
பெருமையினைச்சேர்ப்பதற்கேமகளிர்நாளாம்
மண்தன்னைத்தாயாகவணங்கல்போல
மகளிரினைவணங்குதற்கேமகளிர்நாளாம்
உண்மையானசமத்துவத்தைஉரிமைதன்னை
உவந்தளிக்கவந்ததுதான்மகளிர்நாளாம்!
உயர்கல்விபெண்களெல்லாம்பெறுவதற்கே
உறுதியினைஏற்பதற்கேமகளிர்நாளாம்
முயற்சிசெய்துமுன்னேறும்பெண்களுக்கு
முன்நின்றுஉதவுதற்கேமகளிர்நாளாம்
தயக்கமின்றித்துறையனைத்தும்ஆட்சிசெய்ய
தடைகளினைத்தகர்ப்பதற்கேமகளிர்நாளாம்
மயக்கத்தைமலைப்புதனைஅகற்றிஎங்கும்
மகளிரினைஉயர்த்துதற்கேமகளிர்நாளாம் !
நுகர்பொருளாய்ப்பெண்களினைநினைக்கும்கீழ்மை
நினைவுகளைநீக்குதற்கேமகளிர்நாளாம்
மகளாகதாயாகதமக்கையாக
மனத்தினிலேநினைப்பதற்கேமகளிர்நாளாம்
தகவாகப்பெண்களுக்குத்துணையாய்நின்று
தலைநிமிரச்செய்வதற்கேமகளிர்நாளாம்
மகத்தானசாதனைகள்புரிவதற்கே
மனமுவந்துவாழ்த்துதற்கேமகளிர்நாளாம் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.