கல்பனா சாவ்லா

அரியானாமாநிலத்துக்கர்நால்என்னும்
அழகானசிற்றூரில்பிறந்தபெண்ணாம்
பெரிதாகசாதிக்கும்எண்ணம்நெஞ்சில்
பெற்றிருந்தஅப்பெண்ணோஇளமைதொட்டே
அரிதானகல்விதன்னில்ஆர்வம்கொண்டே
ஆரம்பப்பள்ளிமுதல்எதையும்ஆய்ந்தே
விரிவானவிளக்கத்தைஆசிரியர்கள்
வியந்திடவேகேள்விகேட்டுத்தெளிவுபெற்றார் !
விண்வெளியின்பொறியாளர்ஆகும்எண்ணம்
விதையாகிநெஞ்சிற்குள்வளர்ந்ததாலே
எண்கணிதம்இயற்பியலைப்பாடமாக
எடுத்தவளும்பள்ளிதனில்தேர்ச்சிபெற்றார்
கண்ணானகனவுதனைநனவாய்ஆக்கக்
கல்லூரிதனில்சேர்ந்தஒரேபெண்ணாக
விண்வெளியின்துறைதனிலேபட்டம்பெற்று
விரிவானஆய்வுகளைநாளும்செய்தார் !
வான்வெளியில்நடப்பதற்கும்இயந்திரத்தால்
வடிவமைத்தமனிதரினைஇயக்குதற்கும்
ஊன்உறக்கம்இல்லாமல்பயிற்சிபெற்றே
உடல்மனம்இரண்டினிலும்தகுதிபெற்றார்
தான்நினைத்தஎண்ணத்திற்கேற்றவாறு
தரைவிட்டுப்பறக்கின்றவீரர்ஆறில்
மீன்போன்றேஎதிர்நீச்சில்போட்டிலக்கை
மிதித்திட்டசாவ்லாவும்ஒருவரானார் !
இந்தியாவின்பெயர்சொல்லவிண்ணின்மீது
இறக்கையின்றிப்பறந்திட்டார்முதல்பெண்ணாக
விந்தையன்றுஇளமைமுதல்தளர்ச்சியின்றி
விடாமுயற்சியாலிந்தசாதனைசெய்தார்
சிந்தனையேசெயலாகும்!செயலைச்செய்து
சிறந்திட்டகல்பனாநல்சாவ்லாபோன்றே
முந்திவந்துபெண்களெல்லாம்சரித்திரத்தில்
முன்நிற்கமகளிர்நாள்உறுதிஏற்பீர் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.