ஏழையின் செருப்பு
மிதிலையிலேமணமுடித்தஇராமன்சீதை
மிகுந்தமனக்களிப்புடனேஅயோத்திவந்தார்
புதிதாகமணமுடித்தஇணையருக்குப்
பூரித்தேஅயோத்திநகர்மக்களெல்லாம்
துதித்தன்புபரிசுகளைஅளிப்பதற்குத்
துடிப்புடனேவந்தார்கள்அரண்மனைக்கே
கதிர்மதியாய்ஒளிர்பவர்க்குப்பொன்னும்பட்டும்
கவிதைகளும்தந்தார்கள்மகிழ்ச்சியோடே !
செருப்புதனைக்தைக்கின்றஏழைக்கூலி
செம்மனத்தோன்அன்பாலேஅளிப்பதற்குச்
செருப்பெடுததுவந்தவனோபிறர்கொடுக்கும்
செம்பொருள்கள்கண்டுமிகநாணம்கொண்டான் !
அருவருக்கும்தன்பொருளைக்கொடுத்திடாமல்
அடுத்தடுத்துநிற்பதினைக்கண்டஇராமன்
அரும்பொருளாய்ஏற்றிடுவேன்அன்பால்ஈயும்
அனைத்தையுமேஎனக்கூறிப்பெற்றுக்கொண்டார் !
சிற்றன்னைவரத்தாலேகாடுசெல்ல
சீர்த்தமரவுரிதரித்தேஏழைதந்த
நற்செருப்பைஅணிந்துவீதிவந்தபோது
நகரத்துக்கண்ணீர்க்குள்ஏழைநிற்கப்
பொற்பாதம்தனைக்காட்டிஅன்பால்தந்த
பொருளன்றிப்பொன்பட்டோஉதவவில்லை
எற்றைக்கும்அன்பொன்றேஉயர்வாம்என்ற
அருள்ராமன்சொல்கேட்டேதொழுதான்கூப்பி!
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.