பேருந்து பயணம்
விரைவாகவந்தவொருபேருந்தேறி
வீழாமல்மேல்பிடியைஇறுகப்பற்ற
கரைமோதும்அலைகள்போல்முன்னும்பின்னும்
கால்கள்தாம்தள்ளாடஇருக்கைகாக
இரைதேடும்பறவையைப்போல்கண்கள்தேட
இல்லாமல்அசைந்தபடிநிற்கும்போதோ
வரைந்திட்டஓவியமாய்பயணிகளெல்லாம்
வண்டிக்குள்அமர்ந்திருந்தார்வார்த்தையில்லை !
இருக்கையிலேமூவராகஇருவராக
இடைவெளியேஇல்லாமல்அமர்ந்திருந்தும்
ஒருவருமேமுகம்பார்த்துநகைக்கவில்லை
ஒருசொல்லும்வாய்திறந்துபேசவில்லை !
அருகருகேஉடலிருந்தும்சிந்தையெல்லாம்
அலைப்பேசிக்குள்ளேயேபதித்ததாலே
குருடராகப்பக்கமேதும்நடந்தபோதும்
குறித்தெந்தஉணர்வுமின்றிமூழ்கிருந்தார் !
எதிரிலுள்ளோர்தெரியவில்லைஅலைபேசிக்குள்
எவருடனோஉரையாடிசிரித்திருந்தார்
மதியாலேவந்திட்டபுலனம்மூலம்
மலைகடலைக்கடந்துசென்றுபேசிக்கொண்டார் !
புதிதாகஎவருடனோமுகநூல்நட்பில்
புன்னகைத்துநலம்கேட்டுமகிழ்ந்திருந்தார்
பொதிகளாகஇருந்ததன்றிபழகிப்பேசிப்
பொலிந்திருந்தமனிதராகஇல்லையாரும் !
- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.