எது திருமணம்?
ஒரு சாதி பார்த்து
சமரசம் ஆவதா திருமணம்?
பணம் பார்த்து
பந்தம் போடுவதா திருமணம்?
கட்டிலில் ரெண்டு
உடல் இணைவதா திருமணம்?
காடு வரை - ஒரு
ஒப்பந்தம் போடுவதா திருமணம்?
ஆண் -பெண் இரு இணைகள்
வெறுமனே இணைவதா திருமணம்?
குடும்ப இனப்பெருக்க
குலவிளக்குகளுக்காக எரிய வைப்பதா திருமணம்?
எது திருமணம்?
இருமனம் இணைவது
அவள் அவளாய் இருப்பது
அவன் அவனாய் இருப்பது
தட்டிக் கொடுத்து
விட்டுக் கொடுத்து
விலகாதிருப்பது
உயிர்விடும் வரையில்
துடிக்கும் இதயத்தில்
துடிப்பாய் இருப்பது
ஒரு சுதந்திரப் பறவையாய்
உன்னை உணரச் செய்வது
வாடா, வாடி
போடா போடி
மரியாதை மீறி
செரிக்கும் உணர்வாய்
பறிக்கும் மலராய்
உன்உயிர் கடந்த ஆன்மாவில் பூப்பது
திருமணம்!!
- நௌஷாத்கான். லி, சோழபுரம், கும்பகோணம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.