என்னைப் புரட்டி எடுக்கிறது
என் வீட்டிற்குள்
முன்னறிவிப்பின்றி
நுழைந்து விட்டாள்.
என் தோட்டத்திலுள்ள
பூக்களெல்லாம்
ஒப்பனைச் செய்து
கொள்கின்றன
அவளின் பேரழகோடு
போட்டிப்போட.
புதுவித எண்ணமொன்று
அமைதியின்றி என்னைப்
புரட்டி எடுக்கிறது.
அந்நேரம் எனதுடல்
தீக்கிரையாவது போல்
உணர்கிறேன்.
அது -
இருள் உடைந்ததும்
புல்லை விட்டகலும்
பனித்துளியுமல்ல!
புத்தன் சொன்னது போல்
ஆசையின் பிடியில்
வதைபடுவதே
துன்பத்திற்கு காரணம்.
வேறொரு உயிரோடு
கலந்து விட்ட ஜீவனை
பிரிக்கவும் முடியாது
அவ்வளவு எளிதில்
விட்டு விலகவும் விலகாது.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.