முயன்று வா பெண்ணே...
அகிலங்களை அளந்திடு
ஆகாயத்தில் சுற்றித்திரி!
அத்தனையும் உன்வரவுக்காய்
அன்போடு காத்துக்கிடக்கின்றன!
உன் மனம்போல் வாழ்ந்திடு
உன் மார்க்கத்தில் விரைந்திடு
உன் விருப்பத்தில் வளர்ந்திடு
உன் வாழ்வை வாழ்ந்திடு!
சிறகு விரி
சிதறிய இன்பங்களைச் சேகரித்து
கோட்டையாக மாற்று
உனக்கான விடியலைத் தேடு...
காலடியில் கிடக்கும்
தாழ்வான பல்லுயிர்கள்
பகட்டாய் வாழ்கையில்
உனக்கான வாழ்வை
நேர்மையாக வாழ்ந்திட ...
அள்ளித் தந்த இயக்கையோடு
இணைந்து கனிவுடன் கரம் சேர்ந்து
சிகரம் தொட முன்னேறு...
விதையாக பதமாய் முந்தியடித்து
முயன்று வா பெண்ணே...
கல்வியெனும் சிறகு விரித்து
சாதனை எனும் இலக்கை தொட பறந்தெழு ...
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.