குமறும் நெஞ்சம்

காற்றில் கலந்த
கொரோனாவே
ஏழைகளின்
வாழ்வுரிமையை
தவிக்கவிட்டாயே…
யாரோ செய்த
சதிவேலை
சக்தியிழந்து
நிற்கின்றோம்
நடுத்தெருவில்…!
ஒரு வேளை
உண்டிக்கு
ஊரெல்லாம்
அலைகின்றோம்…
உண்டியில்லாமல்
உறங்கியே
முடங்கிவிடுகின்றோம்
ஊரடங்கால்...
மூச்சுக்காற்றில்
விசம் பரவியதோ
நாசக்காரக்கும்பல்
நாட்டையே
நாசம் செய்கின்றார்.
நிலைத்திருந்த
வாழ்வை
நிலையில்லாமல்
ஆக்கிவிட்டார்களே...?
அவனிதோறும்
அவதிபடுகின்றோம்
நோய்வாய்ப்பட்டு
போராடுகின்றோம்
உயிருக்கு…!
உயிர் மூச்சு
பெரும்
சோதனை
பற்றாக்குறையில்
போராடினோம்.
ஆக்ஜிசன்
தேவையை
உணா்ந்தோம்
மரங்களெல்லாம்
வீழ்த்திய நிலையில்...
நாளெல்லாம்
பதட்டம்
எண்ணிக்கையோ
கோடிக்கோடியாய்…!
சோதனை வேகம்
ஏவுகணையோ…?
இல்லை
ஆமையோ…?
வருடங்கள்
ஓடியும்
முற்றுப்புள்ளி
இல்லாமல்
தொடா்புள்ளியாய்…?
புரியவில்லை
புரிந்தாலும்
விளங்கவில்லை
நாட்டுநடப்பு…?
நாளுக்கு நாள்
கோரத்தாண்டவம்
மழலைச் செல்வம்
முதுமை பிராட்டி.
ஓய்வில்லாமல்
பாகுபாடில்லாமல்
மரணத்தின் பிடியில்…
கிராமப்புறமோ
நகா்ப்புறமோ
வாழ்க்கையோ
நாடோடி.
உள்ளுவதெல்லாம்
உயிர்களின்
உரமே.
அலை அலையாய்
கொரோனா
மடிந்துவிடாதோ.
புத்துலகம்
மலராதோ
மழலைகள்
ஏக்கத்தில்...
இருண்ட
முகத்தில்
நிலவொளி
வீசாதோ...
எதிர்காலம்
ஏக்கம்
நிறைவேறாதோ
கல்வியில்...
பாமரா்கள்
பாரின்
பிதாக்கள்
பட்டினியில்...
காலம்
கரைத்திடும்
கல்வி
அறியாமை
புகட்டிவிட்டதோ...
சிந்திக்கத்
திறனிருந்தும்
முடங்கியே
போயிட்டேமே
வீட்டில்...
விடிந்தால்
வாழ்க்கை
விடியாமல்
போய்விடுமோ…
விடியும்முன்
சடலமானால்
ஈமக்கிரியை
பாசத்தின்
பிணைப்புகள்
உதறியே
மனஇறுக்கத்தில்
இறுதி ஊா்வலம்...
காட்டிலோ
ரோட்டிலோ
குப்பையிலோ
குமறும் நெஞ்சம்...!
- முனைவா் சி. இரகு, வேட்டவலம், திருவண்ணாமலை மாவட்டம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.