பிழையாகிடும்
நான் கேட்டுப் பெறாத
முகத்தை
நான் தருவதாக அறிவித்தும்
யாரும் கேட்கவில்லை.
அதை
நான் கொடுக்க வேண்டிய
கட்டாயமில்லை
நீ பெற்றுக் கொள்ள வேண்டிய
அவசியமில்லை.
தற்போது
நான் கொடுக்க நினைக்கிறேன்
நீ தேவையென்று வரும்போது
என்னால்
கொடுக்கவியலாமல் போகலாம்.
கொடுக்கும் போதே
பெற்றுக் கொள்வது உத்தமம்.
கேட்ட பிறகு கொடுப்பது
தர்மமாகிடும்
கேட்காமல் கொடுப்பது வலியத்
திணிப்பதாகும்.
விருப்பமிருந்தால்
பெற்றுக் கொள்
கொடுப்பதற்கு யாருடைய
அனுமதியும்
எனக்குத் தேவையில்லை.
அது
உனக்குத் தேவையில்லாத
பட்சத்தில்
என் முகம் என்னிடமிருப்பதில்
எனக்கு வருத்தமுமில்லை
சிரமமுமில்லை.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.