பாவம் பார்க்கிறேன்
நிசப்தத்தில்
உறைந்திருக்கும்
மௌனத்தை
உடைக்கப் பார்க்கிறான்.
சாட்சியமற்ற இருள்
ஏதோ
ஒன்றைச் சொல்லக்
காத்திருக்கிறது.
வெளிச்சம்
கூப்பாடு போடும்
எனத் தெரிந்தும்
அவனுக்கு வருத்தமில்லை.
தூரத்தில் முளைத்து
பகல் நேரம்
பக்கத்தில் நெருங்கி
மீண்டும்
தொலைவில் சரியும்
சூரியன் அறிந்திடுமா?
ஆழ்மனதின்
நிழலைப் பிம்பங்களையும்
துளிர்க்கும்
நினைவலைகளையும்.
காலங்காலமாய்
சதமடித்துக் கொண்டிருக்கும்
நாட்கள்
கணக்கிடுவதில்லை.
கரைந்து மறைந்து
பின் வளரும்
நிலவின் கணக்கை.
புழுதிப் படிந்த மன
அழுக்குகள் அத்தனையும்
கொட்டிட சம்மதம்தான்.
சகட்டுமேனி
சாக்கடைக்கு மேல்
துர்நாற்றம் வீசக் கூடுமே
அதற்காகத்தான்
இப்போதும்
பாவம் பார்க்கிறேன் நான்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.