இன்பத் தமிழும் நாமும்...
இன்பத் தமிழே எந்தன் தமிழே
சந்தம் தந்து தரணியாழும் தமிழே
கன்னித் தமிழே காவியத் தமிழே
காவியத் தலைவனை காத்திட்ட தமிழே
எங்கள் உயிரில் கலந்த இன்பத் தமிழே
எங்கும்; நிறைவாய் பொழியும் மொழியே
உயிரும் உடலும் கலந்த தமிழே
தாய்பால் ஊட்டி வீரம் செறிந்த மொழியே
கலையும் பண்பாடும் காத்திட்ட
மறவர் மொழி அகிலம் போற்றும் தமிழ் மொழி
நம் சான்றோர்கள் எழுதிய காவியக்
காப்பகங்கள் சான்றாம்.
வள்ளுவன், வான்முகி, ஒளவையும்
சொல்லிய அறநெறிப் பாக்கள் எல்லாம்
இன்பத் தமிழழைத் தேனாய்ச் சொல்லுதே.
மானிட வாழ்வியல் கோலங்ளையும்.
மனித ஒழுக்க விழுமியங்களையும்
பசுமரத்தாணி போல் சொல்வது.
இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும்
இன்பத்தமிழில் சொல்வது நமக்கு.
வங்கக் கடலும் வானும் இடிந்தாலும்
சங்கே முழங்கு என்று இடித்துரைப்போம்
எங்கும் தமிழாய் எதிலும் தமிழாய்
ஏணியில் உயர்ந்து நிற்போம்
இன்பத்தமிழாய் நாமும்...
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.