சிதைந்து போனது...

மனமெல்லாம் கலகலக்க
பத்து ரூபாய் காசுடன்
மஞ்சள்நிறத் தபால் உறையுடன்
அஞ்சலகம் வந்து அஞ்சலரைச் சந்தித்து.
அருமையாய் பேசிய சில நிமிடம்
கறுப்பு முத்திரையைத் தடார் என்று குத்திவிட்டு
சிரித்த வாயாம் சிகப்பு பெட்டிக்குள்
தள்ளிவிட்டேன் தடார் என்ற சத்தம் மட்டுமே.
சில நாட்கள் கழித்து மறு மடல் கண்டேன்
கல்விச் சாலைக்குள் வரச் சொல்லி அழைப்பாணை.
கல்லூரி முதல்வரின் கட்டளை சுமந்தபடி
காலமும் நேரமும் குறித்தபடி
என்ன செய்வதென்று தெரியாத குதூகலம்...
கடைக்குக் கடை சென்று அழகான சப்பாத்து
வண்ண வண்ண ஆடைகள்
வாங்கிய படி இல்லம் நோக்கி...
கல்லூரி வளாகத்தில் புகுந்தோன்
வெள்ளை உடையணிந்த ஆசிரிய குழாம்
மாலைகள் சுமந்தபடி வரிசையில்.
அறிவில் சிறந்த அதிபர்
அன்பில் சிறந்த ஆசிரியர்கள்
வெண்ணிற புரவி கால்கள்
அசைத்துப் பாய்வது போல
கைகள் அசைத்த கரகோசம்.
இவை எல்லாம் ஒரு நாள் சம்பவம்.
வானவில்லின் அழகு போல
அலங்கரித்த மேடையில்
அறிவு பொக்கிஷங்கள் வீற்றிருக்க...
அறிமுக விழா ஆடல் பாடலுடன்...
மறுநாள் வகுப்பறை கற்பித்தல்
பாலில் ஒரு சொட்டு விசம் கலந்தால் போல்
நாடு விட்டு நாடிவந்த வைரசு
சில பேரைத் தாவிப்பிடிக்க...
கல்லூரி மூடு விழா ஆனது
இனி எப்போது கல்விக் காற்றை
சுவாசிப்போம் என்ற ஏக்கத்துடன்
எழுதுகிறேன்... ... ...
- த. ரூபன், திருகோணமலை, இலங்கை..

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.