வேண்டுகோள்...
பால்யத்தில் இருந்தைப் போலவே
வாலிபம் மெழுகாய்க் கரைந்து
கொண்டிருக்கும் நிலையிலும்
கற்போடிருந்து கொண்டிருக்கிறான்.
இதற்கு அவனைப் போலவே
மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது
அவன் மர்மதேசத்து குறியும்.
இன்னும் எத்தனை நாட்கள்
வாரங்கள் மாதங்கள்
வருடங்களாகுமென்பதைப் பற்றி
வருந்திக் கொண்டிருக்குமவன்
இதுவரையில் எந்தவொரு இன்பமும்
அனுபவித்திடாதவனென்பது
நூறு விழுக்காடுகளுக்கும் மேல்
உண்மை நிரம்பியது.
தன்னைப் போலவே
தனக்கு வரும் மனைவியும்
கற்போடு இருக்க வேண்டுமென்பது
அவனது வேண்டுகோளாய் இருப்பதில்
பிழை இருப்பதாய்த் தெரியவில்லை
அவனைப் போலவே எனக்கும்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.