ஓம் சக்தி
ஓம் ஓம் சக்தி என்று
உள்ளம் உருகிப் பாடுவோம் !
ஆம் ஆம் சக்தி உண்டு
என்றே உணரக்காணுவோம் ! (ஓம் ஓம் சக்தி)
கள்ளம் கபடம் இல்லாமல்
காலை மாலை எந்நாளும்
உள்ளம் உருகிப் பாடிடவே
உள்ளக் கவலைகள் ஓடிடுமே ! (ஓம் ஓம்)
வேண்டும் வேண்டுதல் எல்லாமே
விரைவில் இனிதாய் கூடிடுமே !
மீண்டும் மீண்டும் வேண்டிடவே
யாண்டும் நம்மைத் தூண்டிடுமே ! (ஓம் ஓம்)
சுயநலம் சிறிதும் இல்லாமல்
பொதுநலத் தொண்டு புரிந்தாலே
மனநலம் பணபலம் இவற்றோடு
உடல்நலம் நன்றாய் ஆகிடுமே ! (ஓம் ஓம்)
அகந்தை,,ஆணவம்,, ஆசையெனும்
அழிவுக் குணங்கள் மாறிடுமே !
அன்பு, பாசம், பணிவு என்னும்
அரிய குணங்கள் சேர்ந்திடுமே ! (ஓம் ஓம்)
முயற்சி செய்தும் முடியாமல்
முடங்கிய காரியம் எல்லாமே
முடியும் விந்தை பாருங்கள்
முன்னேற்றம் வாழ்வில் காணுங்கள்! (ஓம் ஓம்)
- கோ சிவகுமார், சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.