நமசிவாய மந்திரம்
அஞ்செழுத்து மந்திரம்
ஆற்றல் மிக்க மந்திரம்!
நெஞ்சகத்துக் கவலையெல்லாம்
நீக்குகின்ற மந்திரம் !
துஞ்சலின்றி வருந்துவோரைத்
தூங்க வைக்கும் மந்திரம்!
தஞ்சமென்று வந்தவர்க்கு
தைரியமூட்டும் மந்திரம்!
பஞ்சம், பசி, பட்டினியைப்
போக்குகின்ற மந்திரம்!
நஞ்சனைய பாவங்களை
நீக்குகின்ற மந்திரம் !
அஞ்சுகின்ற மனிதரின்
அச்சம் நீக்கும் மந்திரம்
வஞ்சியர்க்கு சுகப்பிரசவம்
வழங்குகின்ற மந்திரம்!
பலமுடன் பணமும்
பதவியும் தரும் மந்திரம்!
நலமுடன் வளம் தரும்
"நமசிவாய" மந்திரம் !
- கோ சிவகுமார், சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.