நாம் நாமாகவே...!
பலனை எதிர்பாராமல்
கடமையை மட்டுமே
செய்யென்றார் கிருஷ்ண பரமாத்மா.
அரைந்தவனுக்கு
மறுகன்னத்தைக்
காட்டச்சொன்னார் ஏசுபிரான்.
ஆசையைத் துறந்த புத்தர்
நம்மையும் துறவென்றார்.
அகிலத்தின் ஆண்டவன்
அன்புவொன்றேயென்றார்
நபிகள் நாயகம்.
கத்தியும், ரத்தமும் கூடாது
அகிம்சையே வெல்லுமென்றார்
அண்ணல் காந்திமகான்.
நான், எனது இரண்டையும்
ஒழிக்கச் சொல்லினர்
ஞானியரும்,மேதையரும்.
அவர்கள் சென்னதை
எதையும் செய்யாமல் எல்லோரும்
இருந்து கொண்டிருக்கிறோம்
நாம் நாமாகவே...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.