நிரந்தர அரசியல்வாதி
இந்தக் கட்சி இல்லையெனில்
அந்தக் கட்சி.
அந்தக் கட்சி நீக்கினால்
வேறு கட்சி.
வேறு கட்சி
திருப்தி இல்லையென்றால்
இன்னொரு கட்சி.
பணமும் பதவியும்
காரும் பங்களாவும்
சொகுசு வாழ்க்கையும்
ஆடம்பரங்களும்
நிரந்தரமாய் வேண்டும்.
வேடம் கட்டிய பின்
நடித்தாக வேண்டிய கட்டாயம்.
மேடையில்லையெனில்
தெரு இருக்கிறது.
கல்லா நிரம்ப
பெய்ப் பிரச்சாரம்
போலி வாக்குறுதிகள்.
தன்மானம்
சுயகௌரவமென்று
எதுவுமில்லை எனக்கு;
ஏனெனில் நான்
நிரந்தர அரசியல்வாதி.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.