புரிந்து படி... புத்துயிர் பெறு...
கண்ணால் மறைக்கப்படுவது
காற்றின் ஆசை
காற்றால் மறைக்கப்படுவது
ஆற்றின் ஓசை
ஆற்றால் மறைக்கப்படுவது
அருவியின் இசை
அருவியால் மறைக்கப்படுவது
பாதையின் திசை
பாதையால் மறைக்கப்படுவது
பயணத்தின் வழி
பயணத்தால் மறைக்கப்படுவது
பார்வையின் ஒளி
பார்வையால் மறைக்கப்படுவது
பேசும் மொழி
மொழியால் மறைக்கப்படுவது
சிலரின் அகம்
அகத்தால் மறைக்கப்படுவது
உண்மையான முகம்
முகத்தால் மறைக்கப்படுவது
சோகம்
சோகத்தால் மறைக்கப்படுவது
காலம்
காலத்தால் மாற்றப்படுவது
நான்
என்னால் விலகப்பெறுவது
நீ
உன்னால் நிலையற்று போவது
வேகம்
வேகத்தால் குறையாதது
நேரம்
நேரத்தால் உணர்த்தப்படுவது
சுயநலம்
சுயநலத்தால் கெடுவது
உன் நலம்
மறைப்பதும் மாறுவதும்
என்னில் அல்ல
இருப்பதும் கிடைப்பதும்
நிரந்தரம் அல்ல
உறவுகளும் உயிர்களும்
வேடங்கள் அல்ல
இல்லை என்பதும்
நிஜம் இல்லை!
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.