பிழையற்ற பிழை!
என்னால்
நிகழ்ந்த பிழையென்று
அவர்களின்
வசைச் சொற்களுக்கு
ஆளாகிறேன்.
அவர்கள்
பிழையென்று கருதும் பிழை
என்னிடத்தில்
எதிர்பாராமல் நிகழக் கூட
வாய்ப்பில்லை.
என்னிடம்
வருவதற்கு முன்னமே
அந்தப் பிழை
அவர்களிடத்திலேயேக்
கவனமின்மையால்
நிகழ்ந்து முடித்திருக்கலாம்.
அப்படி அங்கு
நிகழ்வதற்கு வாய்ப்புகள்
நிறைய உண்டு.
அதுதான்
மெய்யும் கூட.
உங்களிடம்
ஒன்றை மட்டும் நிச்சயம்
நான் சொல்லியாக வேண்டும்.
அவர்கள்
பிழையற்றவர்கள் என்பதை
மெய்ப்பிப்பதற்காகவே,
நான்செய்யாத
பிழையின் பழியை
என் மீது
வலியத் திணிக்கிறார்கள்
அவர்கள்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.