மாநகரக் காய்கறிச் சந்தை
நெருக்கமான சாலைகள்,
சுமைத் தூக்கும் கூலியாட்கள்
கூவும் இரைச்சல்,
வாகன இடிபாடுகள்,
தாறுமாறான போக்குவரத்து,
குறுக்கே நுழைந்து செல்லும் நாய்,
பூக்காரப் பெண்கள் வழிமறிப்பு,
வேகமாய் உள்நுழையும்
இரு சக்கர வாகனங்கள்,
பாதை சீர்படுத்தும் காவல்துறை,
எப்பொழுதும் பரபரப்பாய்
மாநகரச் சந்தைப் பகுதி.
எங்கும் வணிகம்,
வாங்குவோர் கைகளில் பை,
அவை நிறையக் காய்கறிச் சுமை.
மழை வந்தால் ஒதுங்க இடமில்லை.
வெயிலுக்கு ஒதுங்கிட நிழல் இல்லை
இதுவே மாநகரக் காய்கறிச் சந்தை.
- நடேச கணேசன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.