கவிதை மனமின்றி
கவிதை மனமின்றி கவிதைக்குள்
எளிதாய் நுழைய முடியாது.
பக்தியுடன் விரமிருந்து
கடவுளை தரிசிப்பது போலத்தான்
கவிதையைப் பற்றுடன்
எழுதுவதும் ரசிப்பதும்.
கவிதை காற்றில் பறக்கும் இறகென
இருத்தல் மிகவும் அவசியம்.
கவிதையும்
அதை வாசிப்பவரின் மனமும்
வாசம் தாங்கி வரும்
தென்றலைப் போலிருத்தல் சிறப்பு.
சில கவிதைகள்
மேற்கூறியவைகளிலிருந்து
மாறுபட்டு படைக்கப் படுவதுமுண்டு.
இம்மாதிரியான கவிதைகள்
பூமியைப் புரட்டிப் போடும்
எனச் சொல்ல முடியாது.
கவிதை கவிதையாய்
இருக்கும் பட்சத்தில்தான்
காலம் முழுவதும் பேசப்படும்
கொண்டாடப்படும் கவிதைகள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.