அந்த வெளியில்...
அங்குப் பார்த்தபோது
அவன் முழுதாய் இருந்தான்.
அவனைப் பார்த்தபடியேதான்
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அதற்குச் சாட்சியாய்
நீங்களும் அங்கு
இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு
வார்த்தைகளுக்குள்ளும் வரிகளுக்குள்ளும் லாவகமாய்
நுழைந்து கொண்டிருக்கிறானவன்.
என் கவிதையில்
பிடிப்புடனும் பற்றுதலுடனும்
நுழைந்து கொள்ளும்
அவனிடமும் சாட்சியான உங்களிடமும்
கவிதை நிறைவுற்றதும்
அதைச் சொல்ல நினைக்கிறேன்.
கவிதையின் நிறைவில்
அவனந்த வெளியில் இல்லாதிருக்கிறான்.
கவிதையில் அவன் மட்டும்
முழுமையாய் இருந்து கொண்டிருக்க
கவிதையெழுதிய நானும்
சாட்சியான நீங்களும்
அவனைப் போலவே
அந்த வெளியில் இல்லாதிருக்கிறோம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.