ஹைக்கூ கவிதைகள்
குருவிகள் சத்தம்
உதிரும் இலைகள்
கீழே அசைவற்ற கற்சிலை.
*****
கடல் பெரிது
மலை பெரிது
ரொம்ப சிறியது மனம்.
*****
சிரிப்பில்லாத சிரிப்பு
கையில் புத்தர் பொம்மை
தூக்கி எறிந்தது குழந்தை.
*****
அதே கடல் அதே பாறை
மோதும் அலைகள்
வெவ்வேறு.
*****
சீடன் உறவு துறந்தான்
பக்தன் காதல் துறந்தான்
எதையும் துறக்காமல் குரு.
*****
பூச்செடிகள் மண் ஈரத்தில்
எந்தப் பறவையின்
சின்னஞ் சிறு காலடிகள் அது.
*****
எங்கெங்கோ அலைந்து
மனம் சோர்ந்து போனான்
குருவைத் தேடிய சீடன்.
*****
பிஞ்சு விரல்களாய் தொங்கியது
பச்சை வெண்டைக்காய்கள்
உள்ளே வெண்முத்துப் பறல்கள்.
*****
உதிர்ந்து உதிர்ந்து
தரையைப் பொன் நிறமாக்கியது
மஞ்சள் சரக்கொன்றை.
*****
துளசி இலை பறித்து சென்றாள்
துளசி இலைகளோடு
என் மனசையும் சேர்த்து.
- நடேச கணேசன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.