காயங்கள்
இன்னும்
மீதமிருக்கிறது
உன்னிடம்
காட்ட வேண்டிய
எனது காயங்கள்.
உங்கள் அனைவரின்
மனநிலையும்
சேர்ப்பின் எதிர்
திசைப் பயணமாய்
இருக்கிறது.
சாய்ந்து கொள்ளவும்
சற்றே இளைப்பாறவும்
தோள்களைத் தேடி
அலைகிறேன்.
ஒன்று மட்டும்
நிச்சயமாய்த் தெரிகிறது.
இந்த அவசர யுகத்தில்
எனக்காகச்
சிலத்துளி கணங்களை
ஒதுக்கி
என்னைத் தட்டிக் கொடுக்க
ஏனோ ஒருவர்க்கும்
நேரமில்லை.
தன்னளவில்
கொஞ்சமும் குறையாமல்
அப்படியே இன்னும்
மீதமிருக்கிறது
உன்னிடம்
காட்ட வேண்டிய
எனது காயங்கள்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.