நரையும்; நறையும்
கவிதை எழுத நான் வெண்தாடி வேந்தன் அல்ல...!
மூடநம்பிக்கையை ஒழிக்க வந்த நரை வேந்தனும் அல்ல...!
முப்பாலை கூற நான் வள்ளுவனும் அல்ல…!
விண்வெளி வீரனாக கனவின் ஏவுகணையைத் தடம் பதித்த கலாமும் அல்ல...!
இயற்கையை ரசிக்க நான் ஆழ்வாரும் அல்ல...!
நாடாள நான் மக்கள் நாயகனும் அல்ல...!
நானோ… ஒரு சிறுமை!
காற்றும், வெண்பனியும் கடல் அலைகளும் நானே...!
தவழும் மழலைகளை நினைக்கையில்… தள்ளாடும் நடையும் அழகே...!
நிறைவு பெற்ற வாழ்க்கையில் என்றும்
நரை(ற)யும் அழகே…!
கடந்து வந்த பாதைகளை நினைக்கையிலே…!
- பபித்ரா. ஜெ, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.