மௌனம்
வார்த்தைகள் இல்லாத
புத்தகம் மௌனம்.
வாசிக்க, வாசிக்க
வாக்கியங்கள் மௌனம்.
மௌன வெளிச்சத்தில்
நம்மை நாமேக் காணலாம்.
மௌன இருட்டில் நம்
துன்பங்களைப் புதைக்கலாம்.
மௌனச் சாவி தயாரித்து விட்டால்
உணர்ச்சிகளைப் பூட்டி வைக்கலாம்.
மௌனம் போதி மரம்.
இதுவரை உலகம்
சொல்லாத உண்மைகளை
இது போதிக்கும்.
மனம் என்பது தவம்.
இதில் ஆழ்ந்தால்
அமைதி நிச்சயம்.
“மௌனம் என்பது வரம்”
நம்மிடம் நாமே பெறுவது.
இன்பம், துன்பம் இரண்டையும்
மௌனம் கொண்டு சந்தித்தால்
எப்போதும் இதயம்
இயல்பாக இருக்கும்.
- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.