ஒன்று, இரண்டு, மூன்று... என்று
ஒன்று, இரண்டு, மூன்று... என்று
எண்ணிக் கொள்கிறார்கள்
அரசியல் கட்சியினர்
பெருமையுடனும் இறுமாப்புடனும்
சலித்துக் கொள்கிறார்கள்
வீட்டை மாற்றும் தம்பதிகள்
தோல்வியடைந்த போட்டித் தேர்வுகள்
வருந்துகிறார்கள் பணிநாடுனர்கள்
கூடிய பெண்கள்
மகிழுகிறார்கள் வாலிபர்கள்
ஏமாற்றிய ஆண்களை எண்ணி
வேதனையடைகிறார்கள் பெண்கள்
தலைமுறைக்குச் சேர்த்த சொத்துக்களை நினைத்துப்
தற்பெருமை கொள்கிறார்கள் பணக்காரர்கள்
லஞ்சத்தின் கணக்கு லட்சத்தில்
ஆனந்தமடைகிறர்கள் அரசுப் பணியாளர்கள்
உடற்சேதம் உயிர்ப்பலிக் கவலையின்றி
அதிவேகமாக ஓட்டுகிறார்கள் வாகன ஓட்டிகள்
தாங்கள் நினைத்தது நடக்கவில்லையென்று
தற்கொலை செய்து கொள்கிறார்கள் கோழைகள்
இப்படி,
ஒன்று, இரண்டு, மூன்று... என்று
எண்ணிக் கொள்கிறார்கள்... பலரும்...
எண்ணிக்கையால் கட்டப்படுகிறது வாழ்க்கை
ஏற்றத்தில் தொடர்கிறது எண்ணிக்கை.
- விஜயன் முல்லை, சித்தூர், பாலக்காடு மாவட்டம், கேரளா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.