தேர்தல் கூட்டம்
குறைந்தது
நாலாயிரம் பேராவது
கேட்டிருக்க வேண்டிய
பேச்சு
நாற்பதைத் தாண்டவில்லை
தொண்டர்கள்.
இடையிடையே
தாகத்துக்கு
சோடா கூட குடிக்காம
கர்ஜித்துப் பேசினார் தலைவர்.
கூட்டம் முடிந்து
வீட்டுக்குப் போனவனிடம்
என்ன பேசினார் தலைவருன்னு
கேட்டு நர்ச்சரிக்கிறார்
படுக்கையேக் கதியென்றிருக்கும்
அப்பா.
தலைவர்
ரொம்ப நல்லாப் பேசினார்
என்னன்னமோப் பேசினார்
குறிப்பா
எந்தக் கட்சின்னும் பார்க்காதே
பணம் யாரு கொடுத்தாலும்
வாங்கிக்கச் சொன்னாரு.
நம்ம கட்சிக்கு
ஓட்டு போடச் சொன்னாருன்னு
ஏப்பம் விட்டவாறு
சொல்லி முடிக்கிறான்.
கூட்டத்தில் கொடுத்த
அரை பிளேட் சிக்கன் பிரியாணி
முழுவதுமாய் ஜீரணித்திருந்தது
அவனுக்கு.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.