சலனம்
நான் தனிமையிலிருப்பதை
உங்களைப் போல் யாரிடத்திலும்
சொல்லிக் கொள்வதில்லை.
மௌனம்
என்னை நல்லவனென்று
பலமுறை சொல்லியிருக்கிறது.
நடுக்கடலின் அமைதியை
தன்னந்தனியே ரசிக்கிறது
நிலா.
ஒவ்வொரு ஜீவனையும்
முழுமையாய்த் தரிசிக்கிறது
காற்று.
மண்ணுக்குள் உறங்கும் விதை
பூமியைப் பிளக்க
தலைநீட்டுகிறது தளிர்.
நிர்வாணங்களைப் பார்த்து
பழகிய பழைய இரவுகள்
நிசப்தத்தை துறந்து
நெடுநாட்களாயிற்று.
பெட்டகங்களிலிருக்கும்
பொன்னும் பொருளும் அகிலம்
கண்டு நெடுநாட்களாயிற்று.
நீ எதற்கும் சலனப்படாமல்
சிலையாய் இருந்து கொள்வது
உத்தமம்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.