வித்தியாசங்கள்
சதுர சதுரமாய்
சதுரங்களை
வெட்டிக் கொண்டிருக்கிறாய்
அடுத்து
வட்ட வட்டமாய்
வட்டங்களை வெட்டத் தொடங்கி
அதை
அரை காலென வெட்டுகிறாய்.
நேர்த்தியுடன்
முக்கோணத்தை சிதைக்காமல்
முழுமையாய் வெட்டத் தொடங்கி
வெட்டலின் சூத்திரத்தை
அறியத் தொடங்கிய நாளில்
மீண்டும் சதுர சதுரமாய்ச்
சதுரங்களை
வெட்டத் தொடங்குகிறாய்.
நீ ஆரம்பத்தில்
வெட்டிய சதுரங்களுக்கும்
இப்போது
வெட்டி முடித்த சதுரங்களுக்கும்
காணமுடிகிறது
நிறைய வித்தியாசங்கள்.
அதுபோல்
உன்னிலும்...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.