சாமியாடி
சற்று நேரத்தில்
அவளுக்குள்
இறங்கப் போகிறார் சாமி.
அத்தருணம்
அவளுக்குள்ளும்
உழன்றபடி இருக்கிறது.
கேள்விக் கணைகளோடும்
கோரிக்கைகளோடும்
கூட்டமாய்க் குவிந்தபடி
மக்கள்.
கைக்குவித்து பக்தர்கள் நிற்க
கடவுளாகிறாள்
கன்னிப்பெண்.
விளக்கங்களும் பரிகார
பரிவர்த்தனைகளும் பகிராமல்
மலையேறுவதில்லை அவள்.
அவளுக்குள் இறங்கி
அருள்வாக்கு சொல்லும் சாமி
இந்த வாக்கைத் தவிர
அவளுக்கென்று
ஒரு வாக்கையும் சொல்லவில்லை.
அவளுக்கென்று யாரும்
சாமியிடம் வாக்கு கேட்கவுமில்லை.
சாமியாடி சாமியாடி
இருந்து கொண்டிருக்கிறாள்
இன்னமும்
முதிர்க்கன்னியாகவே அவள்.
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.