மாற்றங்கள்
காலத்தோடு சேர்ந்தே
பயணிக்கப்படுபவை
மாற்றங்கள்.
மாற்றங்கள் விரும்பியாய்
மனிதர்கள்.
மாற்றங்களை
நிகழ்த்தாதவரும்
பிரிதொருவரின்
மாற்றங்களை விரும்பியும்
அதில் திளைத்தும்.
மாற்றங்களை நிகழ்த்த
மறந்தவனின் மாற்றங்களும்
நீண்டும் பெருத்தும்
வளர்ந்து விடுகிறது.
அவன் காலம் தாழ்த்துதலில்.
மக்களும் சமூகமும்
ஒருசேர மாறுகையில்
நிகழ்ந்து முடிகிறது
பிறர் விரும்பும்படியாய்
கூரியகவனத்துடன்
பற்பல மாற்றங்கள்.
மாற்றங்கள்
புகுத்தியவனை புதுமை
விரும்பியாய் மகுடம்
சூட்டிவிடுகிறது
காலம் அப்போது அவனுக்கு!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.