தமிழினிது
தமிழில் நெஞ்சம் இனிக்கப் பேசுங்கள்
மனபாரம் குறையும்.
தமிழைச் செவிசாய்த்து கேளுங்கள்
பகையெல்லாம் மறையும்.
தமிழை அணுவணுவாக இரசியுங்கள்
மனசு பூவாக மாறும்.
தமிழாக வாழ்ந்து பாருங்கள்
வசந்தம் தாலாட்டிப் போகும்.
தமிழோடு இருந்து பாருங்கள்
குதூகலம் வந்து சேரும்.
தமிழை உணர்ந்து பாருங்கள்
மனசெல்லாம் இலேசாத் தோணும்.
தமிழை முயன்று பாருங்கள்
முயற்சியெல்லாம் வெற்றி தரும்.
தமிழ் எனச் சொல்லிப் பாருங்கள்
எதிரில் புன்னகை தவழும்.
தமிழ் எங்கள் உயிர்மூச்சு என சொல்லுங்கள்
எதிரில் கண்ணீர் வழிந்திடும்.
தமிழ் வழியேச் செல்லுங்கள்
முட்டுக்கட்டைகள் முடங்கிப் போகும்.
தமிழோடு வாழ்ந்து பாருங்கள்
எந்த நோயும் பறந்து போகும்.
தமிழோடு இணைந்து பாருங்கள்
இதயங்கள் களிப்படையும்.
இனிது இனிது எம்அன்னைத் தமிழ்
அமிழ்தினும் இனிது...!
- பாரியன்பன் நாகராஜன், குடியாத்தம்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.