வரைதலில் நளினம்
வண்ணங்களை எல்லாம்
சேகரித்தாகிவிட்டது.
சேகரித்ததில் சிலதை சேர்மானமாக்கி
மீள் வண்ணக்கலவைகளும்
தயாராகிவிட்டது.
தூரிகை தொட்டு
எவ்வண்ணத்தை
குலைத்தெடுத்து
பூசிக் காட்டுவதென்பதில்தான்
முழு வாழ்வும்
கழிகிறது
பேரச்சமாக.
உயிரோவியமாக
உங்கள் உள்ளம் கவரும்
இப்பிரயத்தனப் பாடுகளில்
அசலோவியம் காட்டாமலையே
முடிந்து போகுமோ
இவ்வாழ்வெனும்
அச்சம் மேலிடுகிறது
அவ்வப்பொழுது
இணக்கமாகிவிடுதலின்
பொருட்டான பிரயத்தனங்களில்
நிறமிகள்
வண்ணமிழப்பதால்.
- ரவி அல்லது, பட்டுக்கோட்டை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.