குரு வந்தனம்
கற்றவை ஆயிரம்
கற்பவை ஆயிரம்
பொற்குவை தானே
புகழ்மிக்க அவ்வறிவே!
பொற்பதம் பணிகிறேன்
புகழ்மிக்க என்குருவே!
கற்றுத் தந்தவர்
எல்லாம் குருவே!
பற்றுக் கொண்டேன்
கற்றுக் கொண்டேன்!
சொல்லால் தந்ததும்
சொல்லாமல் தந்ததும்
எல்லாமே உங்களறிவே!
எமையாளும் குருவறிவே!
சொற்பமே சொன்னாலும்
சுவைமிகச் சொல்வீரே!
கற்பனை வளங்கொண்டு
கவிதை நயங்கொண்டு
அற்புதம் படைத்திடும்
அத்தனை விதமுண்டு!
அமைதியாய்ச் சொல்லியே
அரவம் உணர்த்திடும்
அண்ணலே குருவே
அவனியின் அற்புதமே!
அத்துணை அறிந்தும்
ஆணவம் என்பது
சுத்தமாய் உனக்கில்லை!
ஆயிரம் அறியினும்
ஆழ்கடல் அமைதியாய்
வாழ்ந்திடும் குருவே
வந்தனம் உமக்கே!
வந்தனம் உமக்கே!
- வைரமணி, சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.