இயற்கை வாதிக்கிறது…
அந்தி வெளிச்சம் வருகிறது..!
காற்றே வழிவிடு
ஆயிரங்கொண்டலோடி
வருகிறது…
மின்மினிப் பூதமாய்
சூரியன் மறைகிறான்
சிவந்த கனல்களால்
விண்ணிலே உரசுகிறான்…
மேற்கிலே
உலை மூட்டுகிறான்
மேக கணங்களும்
தீப்பிடிக்கின்றன…
அந்தி வெளிச்சம் வருகிறது
காற்றே வழிவிடு!
அவசரமாய்
மறைந்து விடப்போகிறது…
கதிரவனின் தோல்
உரிந்து விட்டதோ?
கடலும் படம் எடுக்கிறது
ஓசைப் படாமல்
ஒப்பாரி வைக்கிறது…
அந்தி வெளிச்சம் வருகிறது…
ஆனால்
சூரியன் மறைகிறது…
சூரியன்
மறையும் போதும்
சுகமான வெளிச்சங்கள்…
- ஜுமானா ஜுனைட், இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.