காதல்...!
காதல்...!
வாழ்க்கை மலரில்
போதை மது...!
காதல்...!
ஒரு போராட்டம்:
ஆரம்பிக்கலாம்
முடிவில்லாதது..!
காதல்...!
ஒரு கடல்:
குளிக்கலாம்
முத்தெடுப்பது முயற்சியே..!
காதல்...
வெற்றிக்குப் பின்
விமர்சிக்கப் படுவதில்லை..!
காதல்...!
தோல்விக்குப் பின்
தோற்றுவிப்பது
கண்ணீரும்,
கவிதைகளும்..!
காதல்...!
கடிதங்களிலும்
கவிதைகளிலும்
மட்டுமே
எப்போதும்
பசுமையாக
இருக்கிறது...!
இழந்த காதல்...!
பார்த்தான்
பார்த்தாள்
நெஞ்சுக்குள் ஒரு நெருடல்...!
சிரித்தான்
சிரித்தாள்
இதயத்தில் அவள் முகம்...!
பேசினான்
பேசினாள்
காதல் விதையானது...!
கடிதம் கொடுத்தான்
பெற்றுக் கொண்டாள்
காதல் முளைத்தது...!
கை தொட்டான்
தலை கவிழ்ந்தாள்
காதல் மரமானது...!
கடற்கரை மணலில்
கைகோர்த்து நடந்தார்கள்
காதல் கனியானது...!
கல்யாணப் பந்தலில்
காசு பணத் தகராறில்
காணாமல் போனது காதல்..!!
- பாளை. சுசி.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.