உறுத்தல்கள்..!
கல்லூரி வளாகத்தில்- உன்
கடைக்கண் பார்வைக்காய்- நான்
காத்துக்கிடந்த நாட்கள் உண்டு- நீ
கண்டும், காணாது போன நாட்கள் மாறிக்
காண வேண்டும் என்று வந்த நாட்களில்
உன் பெயர் சொல்லி
உரிமையோடு நான் அழைக்க,
ஆசையோடு என் அருகில்
நீ வர
பரஸ்பர சிரிப்பில் தொடங்கி
சினிமா, சிற்றுண்டி, கடிதம்..
இப்படி வளர்ந்த நம் காதல்
சிறு பிள்ளை மணல் வீடாய்
சிதைந்து, மறைந்து போனாலும்
சிற்சில வேளையில்
சிதறிய சிறு மணலின்
சிறு சிறு உறுத்தல்கள்
ரண வேதனையாய்
என் மனதில்..!
- பாளை.சுசி

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.